search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகளுக்கு கடன் திட்டம்"

    நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினையை தீர்க்க நாள்தோறும் கடனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது.#KarnatakaGovernment #Karnatakaloanploan

    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மத சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    குமாரசாமி முதல்- மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து வருகிறார்.

    தற்போது நடைபாதை வியாபாரிகளின் நலனில் அக்கரை செலுத்த கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. கந்துவட்டியால் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    2 முதல் 10 சதவீதம் வரை தினசரி வட்ட பணம் வாங்குவதால் அவர்கள் பெரிதும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினையை தீர்க்க நாள்தோறும் கடனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மந்திரி பண்டேப்பா கசெம்பூர் கூறியதாவது:-



    கந்து வட்டிக்காரர்களால் ஏழைகளான நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். நாள்தோறும் சம்பாதிப்பவர்கள் கந்து வட்டியால் இன்னலுக்கு ஆளாகிறார்கள். காலையில் பணத்தை வாங்கி மாலையில் 10 சதவீத வட்டியுடன் அவர்கள் திருப்பி செலுத்துகிறார்கள்.

    அவர்கள் துயரத்தை போக்க நாள்தோறும் கடன் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டப்படி நடைபாதை வியாபாரிகள் அரசிடம் இருந்து காலையில் பணத்தை பெற்றுக் கொண்டு மாலையில் திருப்பி செலுத்த வேண்டும். தினசரி வட்டி கிடையாது. அல்லது பெயரளவில் வட்டி இருக்கலாம். இந்த திட்டம் மூலம் சிறு வியாபாரிகள் நிம்மதி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KarnatakaGovernment  #Karnatakaloanploan

    ×